Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் அல்ஜீரியாவின் நீண்டகால ஜனாதிபதியாக பணியாற்றிய பூடெஃப்லிகா காலமானார்

அல்ஜீரியாவின் நீண்டகால ஜனாதிபதியாக பணியாற்றிய பூடெஃப்லிகா காலமானார்

1 minutes read

அல்ஜீரியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்தெலாசிஸ் பூடெஃப்லிகா தனது 84 ஆவது வயதில் காலமானார்.

Abdelaziz Bouteflika applauds after taking the oath as President in Algiers in 2014. He died at age 84, state television announced on September 17.

ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக அல்ஜீரிய அரசியலில் ஒரு முக்கிய நபராக இருந்த அப்தெலாசிஸ் பூட்டெஃப்லிகா, 1999 – 2019 வரை அல்ஜீரியாவின் நீண்டகால ஜனாதிபதியாக பணியாற்றினார்.

அல்ஜீரியாவின் சுதந்திரப் போரின் சிரேஷ்ட வீரரான பூடெஃப்லிகா, 2019 ஏப்ரலில் இராஜினாமா செய்வதற்கு முன்பு இரண்டு தசாப்தங்களாக வட ஆப்பிரிக்க நாட்டை ஆட்சி செய்தார்.

2013 ஆம் ஆண்டு பக்கவாத நோய்க்கு பின்னர் அவர் பொது வெளியில் தோன்றுவது அரிதானதாகவே காணப்பட்டு வந்தது.

அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களைக் கோரும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதாற்கான பூடெஃப்லிகா 2019 இல் இராஜினாமா செய்தார்.

அதன் பின்னர் அதிகாரிகள் ஊழல் குறித்து முன்னோடியில்லாத விசாரணைகளைத் தொடங்கினர், இது பூட்டெஃப்லிகாவின் சக்திவாய்ந்த சகோதரரும் ஆலோசகருமான செட் உட்பட பல மூத்த அதிகாரிகளை சிறையில் அடைத்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More