Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா ஓரிகான் கடற்கரைகளில் கரையொதுங்கும் விசித்திர மீன்கள்!

ஓரிகான் கடற்கரைகளில் கரையொதுங்கும் விசித்திர மீன்கள்!

0 minutes read

கோரைத் தாடைகள் மற்றும் பெரிய வீங்கிய கண்கள் கொண்ட பல விசித்திரமான தோற்றமுடைய மீன்கள் ஓரிகானின் கடற்கரைகளில் கரை ஒதுங்கியுள்ளதாக Fox Weather செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மீன்கள் பொதுவாக கடலில் ஒரு மைல் ஆழத்திற்கு மேல் காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

கடுமையான தோற்றமுள்ள பற்கள், வீங்கிய கண்கள் மற்றும் பாய்மரம் போன்ற துடுப்பு கொண்ட இந்த மீன்களின் திடீர் தோற்றத்தால் விஞ்ஞானிகள் குழப்பமடைந்துள்ளனர்.

இந்த லான்செட் மீன்கள் ஒரு காலத்தில் டைனோசர்களுடன் நீந்தியது போல் இருக்கும். கடந்த சில வாரங்களாக நெஹலேம் தெற்கில் இருந்து பாண்டன் வரை பல லான்செட்ஃபிஷ்கள் ஓரிகானின் கடற்கரைகளில் கரை ஒதுங்கியுள்ளன.

இந்த ஆழ்கடல் மீன்கள் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல நீரில் வாழ்கின்றன மற்றும் உணவளிக்க பெரிங் கடல் வரை வடக்கே இடம்பெயரும்.

அவைகள் ஏன் கரை ஒதுங்குகிறார்கள் என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை என Fox Weather பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More