செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா விவாதத்தின்போது மேடையில் தூங்கிய ஜோ பைடன்

விவாதத்தின்போது மேடையில் தூங்கிய ஜோ பைடன்

1 minutes read

நவம்பர் 5ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதுடன், ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி என்பன நேருக்கு நேர் மோத உள்ளன.

ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் களமிறங்கியுள்ளதுடன், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகின்றார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்குமுன் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பார்கள்.

முக்கியமாக, வெளியுறவு கொள்கைகள், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு வேட்பாளர்களும் விவாதிப்பார்கள்.

அந்த வகையில் சிஎன்என் செய்தி நிறுவனம் சார்பில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் ஜோ பைடன், டொனால்ட் டிரம்ப் இடையேயான நேருக்கு நேர் விவாதம் கடந்த 28ஆம் திகதி நடைபெற்றது.

இந்த விவாதத்தில் டிரம்ப், பைடன் என இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், டிரம்ப்பின் குற்றச்சாட்டுகளுக்கு பைடன் சரிவர பதில் அளிக்கவில்லை.

மேலும், விவாதம் முழுவதும் டிரம்ப்பின் ஆதிக்கமே இருந்ததுடன், விவாதத்திற்குப்பின் நடந்த வாக்கெடுப்பில் விவாதத்தில் டிரம்ப் வெற்றிபெற்றதாக முடிவுகள் வெளியாகின.

இதனால், பைடனுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதுடன், சொந்த கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்களே ஜோ பைடனுக்கு பதிலாக வேறு யாரையாவது ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தலாமா? என திட்டமிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், டிரம்ப் உடனான விவாத நிகழ்ச்சியின்போது கிட்டத்தட்ட தூங்கிவிட்டதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

விவாத நிகழ்ச்சிக்கு சில நாட்களுக்கு முன்பாக தான் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதுடன், அதில் மிகவும் சோர்வாக இருந்தாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இந்த விவகாரத்தை தான் சரிவர கையாளவில்லை என்றும் தனது அதிகாரிகள் கூறியதையும் தான் கேட்கவில்லை என்றும் விவாத நிகழ்ச்சியின்போது மேடையிலேயே தான் கிட்டத்தட்ட தூங்கிவிட்டதுடன், விவாத நிகழ்ச்சியில் சரிவர செயல்படாதமைக்கு மன்னிப்பு கேட்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.