பிரான்சில் இருந்து இங்கிலாந்துக்கு ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற எட்டு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதுடன், 10 மாத குழந்தை உட்பட ஆறு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வடக்கு பிரான்சின் Pas-de-Calais பகுதியில் உள்ள Ambleteuse கடற்கரையில் சிக்கிய படகில் 53 குடியேறியவர்கள் இருந்ததாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்பு பணி தொடங்கப்பட்ட நிலையில், எட்டு பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகாலை 1 மணிக்குப் பிறகு Boulogne க்கு வடக்கே உள்ள நீரில் படகு சிக்கியதை அடுத்து மீட்பு சேவைகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
53 பேரை ஏற்றிச் சென்ற கப்பல் கடற்கரையை விட்டு வெளியேறிய உடனேயே மூழ்கத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்கள் எரித்திரியா, சூடான், சிரியா, ஆப்கானிஸ்தான், எகிப்து மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.