3
கார்ஷல்டனில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் சுமார் 25 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க வியாழக்கிழமை காலை 10.46 மணியளவில் அங்கு சென்றனர்.
தீயினால் தரைத்தளத்தின் பாதி சேதமடைந்த நிலையில், ஒரு பெண் தீயணைப்பு வீரர்களால் கட்டிடத்திலிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக இலண்டன் தீயணைப்பு படை (LFB) தெரிவித்துள்ளது.