செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் 2028 – 2034 ஆண்டு வரவு – செலவுத்திட்ட பிரதியை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டது!

2028 – 2034 ஆண்டு வரவு – செலவுத்திட்ட பிரதியை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டது!

1 minutes read

2028ஆம் ஆண்டு முதல் 2034ஆம் ஆண்டு வரைக்கான நீண்ட கால வரவு – செலவுத் திட்ட பிரதியை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ளது.

சுமார் 2.3 டிரில்லியன் டொலர் மதிப்பில் குறித்த வரவு – செலவுத்திட்டம் அமைந்துள்ளது.

அத்துடன், பசுமைத் தொழில்நுட்பம், மின்னலக்கமயமாதல், தற்காப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் முதலீடுகளை அதிகரிக்க 451 பில்லியன் யூரோ மதிப்பிலான போட்டித்தன்மை நிதித்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

குறிப்பாக, உக்ரேனை மறுசீரமைப்பதற்காக 100 பில்லியன் யூரோ இதில் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்வெளித் திட்டங்கள் மற்றும் தற்காப்புத் திட்டங்கள் ஆகியவற்றுக்கான செலவினத்தை ஐரோப்பிய ஒன்றியம் 5 மடங்கு அதிகரிக்கவுள்ளது.

ஐரோப்பாவின் பாதுகாப்பு, போட்டித்தன்மை, பருவநிலை மாற்றங்கள் ஆகியவற்றை வலுப்படுத்தவும் உக்ரேனுக்கு ஆதரவளிக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் முற்படுவதாக ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயென் தெரிவித்தார்.

புதிய வரவு – செலவுக் கட்டமைப்பு இன்னும் வெளிப்படையான திட்டமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவிடமிருந்து வர்த்தகப் பதற்றங்கள், ரஷ்யாவின் அரசியல் அச்சுறுத்தல்கள், உள்நாட்டில் வேளாண்மை மற்றும் கடன் பிரச்சனைகள் ஆகியவற்றை ஐரோப்பிய ஒன்றியம் எதிர்நோக்குகிறமை சுட்டிக்காட்டத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.