வடக்கு அயர்லாந்து – ஃபெர்மனாக் கவுண்டி, (County Fermanagh) மாகுயர்ஸ்பிரிட்ஜில் (Maguiresbridge) பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் தாயும் அவரது இரு குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.
40 வயது பெண், அவரது பிள்ளைகளான மகன் மற்றும் மகளே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன், அதே குடும்பத்தைச் சேர்ந்த ஆணொருவர், பெல்ஃபாஸ்டில் உள்ள ராயல் விக்டோரியா மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக மாவட்ட பொலிஸ் தளபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் மேற்படி மூவரின் கொலைகள் மற்றும் தற்கொலை முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என ஆரம்ப விசாரணையில் நம்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
வடக்கு அயர்லாந்து பொலிஸ் சேவை (PSNI) விசாரணையைத் தொடங்கியுள்ளது. “இச்சூழ்நிலைகளைத் தீர்மானிக்க வேகத்தில் செயல்பட்டு வருகிறது” என்று அதன் கண்காணிப்பாளர் ராபர்ட் மெக்கோவன், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தில் வீட்டில் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், மூன்றாவது நபர் பின்னர் மருத்துவமனையில் இறந்ததாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.