ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் வர்த்தக உடன்பாட்டை எட்டியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் விதித்த ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி காலக்கெடுவுக்குள் மேற்படி உடன்பாடு காணப்பட்டுள்ளது.
ஐரோப்பியப் பொருள்களுக்கு 30 சதவீத வரியை விதிக்கப் போவதாக டிரம்ப் எச்சரித்திருந்தார்.
வரி 10 சதவீதமாக இருக்க வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் விருப்பமாகும். எனினும், புதிய உடன்பாட்டின்படி அது 15 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரான்ஸும் ஜெர்மனியும் அவற்றின் கார் உற்பத்தித் துறைக்கு அறவே வரி இருக்கக் கூடாது என்று போராடிப் பார்த்தன.
புதிய வரி கார், கணினி மற்றும் மருந்துப் பொருள்கள் என்று அனைத்துக்கும் பொருந்தும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியது.
உடன்பாடு கொண்டாடப்பட்டாலும், 15 சதவீத வரி என்பது ஐரோப்பியப் பொருளாதாரத்தில் மோசமான தாக்கத்தையே ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.