அமெரிக்கா – நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் அலுவலக கட்டடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களில் பொலிஸ் அதிகாரி ஒருவரும் அடங்குவர்.
அத்துடன், சந்தேகத்துக்கரிய துப்பாக்கிக்காரி தனது உயிரையும் மாய்த்துள்ளமையில் உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆகும்.
27 வயதான சந்தேகநபர் ஷேன் தமுரா என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நியூயார்க் பொலிஸார் தெரிவித்தனர்.
Blackstone முதலீட்டு நிறுவனம் இருக்கும் அலுவலகக் கட்டடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக AFP செய்தி நிறுவனம் கூறியது.
அந்தப் பகுதியில் பல்வேறு பெரிய நிறுவனங்களின் அலுவலகங்களும் சொகுசு ஹோட்டல்களும் அமைந்துள்ளன.
துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
