உலகின் மிகவும் பிரபலமான தேடுபொறிக்கு ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக, செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி முடிவுகளை உருவாக்கும் ஒரு புதிய கருவியை இங்கிலாந்தில் கூகிள் வெளியிடுகிறது.
நீல நிறத்தில் உள்ள பிற வலைத்தளங்களுக்கான இணைப்புகளைக் காட்டும் தேடல் முடிவுகளின் பட்டியலுக்குப் பதிலாக, AI பயன்முறையை தேர்வு செய்பவர்களுக்கு, ஏனைய பக்கங்களுக்கான இணைப்புகளைக் கொண்ட உரையாடல் பாணியில் எழுதப்பட்ட பதில் வழங்கப்படும்.
புதிய தேடல் கருவி, ஒவ்வொரு நாளும் பில்லியன் கணக்கான வினாக்களை செயல்படுத்தும் Google இன் தற்போதைய தேடல் தளத்தை மாற்றாது.
ஆனால், நிபுணர்கள் அத்தகைய கருவிகள் AI ஐ அதிகளவில் இணைக்கும் என்று கணித்துள்ளனர்.
இது தேடல் பொறியை நம்பியிருக்கும் நிறுவனங்கள் மற்றும் வெளியீட்டாளர்களைப் பற்றிய ஒரு மாற்றமாகும்.
கேள்விகளுக்கு விரைவான, எளிமையான பதில்களைக் கண்டறிய, பாரம்பரிய தேடுபொறிகளுக்குப் பதிலாக ChatGPT போன்ற AI சாட்போட்களை மக்கள் அதிகளவில் நோக்கி வருகின்றனர். அவை எப்போதும் துல்லியமாக இல்லாவிட்டாலும் கூட மக்கள் அதையே நாடுகின்றனர்.
எனவே, கூகிள் ஏற்கெனவே சில தேடல்களுக்கான பட்டியலிடப்பட்ட முடிவுகளில் AI உருவாக்கிய ஒரு சுருக்கமான கண்ணோட்டத்தை உள்ளடக்குறிகது.
மேலும், கூகிளின் ஜெமினி AI தளத்தைப் பயன்படுத்தி பதில்களை உருவாக்கும் புதிய கருவி, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் ஏற்கெனவே பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இது அடுத்த சில நாட்களில் இங்கிலாந்தில் வெளியிடப்படுகிறது.