புகைப்படத் தொகுப்பு

Home உலகம் தமிழகத்தின் பா.ஜ.க துணைத் தலைவராக குஷ்பு நியமனம்!

தமிழகத்தின் பா.ஜ.க துணைத் தலைவராக குஷ்பு நியமனம்!

0 minutes read

தமிழகத்தின் பா.ஜ.க மாநில துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம் செய்து, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்தார்.

அதன்படி, தமிழகத்தின் பா.ஜ.க துணைத் தலைவராக (தென் சென்னை) நடிகை குஷ்பு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மாநில துணைத் தலைவர்களாக சர்கவரத்தி, துரைசாமி, ராமலிங்கம், கரு. நாகராஜன் மற்றும் சசிகலா புஷ்பா கனகசபாபதி ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டனர்.

மேலும், பா.ஜ.க மாநில துணைத் தலைவர்களாக டால்பின் ஸ்ரீதர், சம்பத், பால் கனகராஜ், ஜெயபிரகாஷ், வெங்கடேசன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டனர்.

பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர்களாக பால கணபதி, ஸ்ரீநிவாசன், முருகானந்தம், கார்த்தியாயினி, ஏ.பி. முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டனர்.

பா.ஜ.க மாநில பொருளாளராக சேகர், இணைப் பொருளாளராக சிவசுப்பிரமணியம் நியமனம் செய்து நயினார் நாகேந்திரன் அறிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.