இங்கிலாந்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய புளோரிஸ் புயலுக்குப் பின் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றனர். சில ரயில் சேவைகளும் தடைப்பட்டுள்ளன.
சுமார் 50,000 வீடுகள் மின்சாரம் இல்லாமல் தவித்ததைத் தொடர்ந்து, விநியோகங்களை மீட்டெடுப்பதில் ஸ்காட்டிஷ் மற்றும் தெற்கு மின்சார நெட்வொர்க்குகள் (SSEN) தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தன.
அத்துடன், “புளோரிஸ் சமீபத்திய சம்பவங்களில் மிகவும் சேதப்படுத்தும் கோடை புயல்” என்று SSEN கூறியது.
திங்கட்கிழமையன்று ஸ்காட்லாந்து முழுவதும் ரயில் பாதைகளில் 119 சம்பவங்கள் தடை பதிவாகியுள்ளன. சில பகுதிகளில் மணிக்கு 90 மைல் வேகத்தில் வீசிய காற்றுக்கு மத்தியில், வீதிகளை சரிசெய்ய குழுக்கள் அயராது உழைத்து வருவதாக நெட்வொர்க் ரயில் நிறுவனர் தெரிவித்தது.
ரத்து செய்யப்பட்ட ரயில்கள் மற்றும் விமானங்கள் இங்கிலாந்து முழுவதும் பரவலான இடையூறுகளை ஏற்படுத்தின.
விமான பகுப்பாய்வு நிறுவனமான சிரியத்தின் ஆரம்ப அறிக்கைகள் புயலின் விளைவாக புறப்படவிருந்த 68 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகக் கூறுகின்றன.
புளோரிஸ் புயலால் ஹைலேண்ட்ஸ், மோரே மற்றும் அபெர்டீன்ஷையரில் ஆயிரக்கணக்கான சொத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்தின் வடமேற்குப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு புதன்கிழமை பிற்பகுதியிலும் வியாழக்கிழமை வரையிலும் பருவகாலமற்ற மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை மேலும் நீடிக்கும் என்று வானிலை அலுவலகம் எச்சரித்துள்ளது.