1970இல் நிலவுக்கு அனுப்பப்பட்ட அப்போலோ 13 இல் பயணித்திருந்த பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் லோவெல் காலமானார்.
அவருக்கு வயது 97 ஆகும்.
தோல்வியில் முடிந்த அப்போலோ 13 பயணம் இன்றுவரையில் தன்முனைப்புத் தரும் ஒரு நிகழ்வாகத் திகழ்கிறது.
அப்பயணத்தின்போது விண்கலத்தில் வெடிப்பு ஏற்பட்டதில் லோவெல்லும் அவருடன் இருந்த இரு வீரர்களும் மூன்றரை நாள்கள் விண்வெளியில் சிக்கிக்கொண்டனர்.
நீரும் உணவும் இல்லாதபோதும் மனம் தளராமல் பூமி திரும்புவதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டனர்.
அப்போலோ 13 விண்வெளிப் பயணம் பற்றி 1995ஆம் ஹாலிவுட் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. அதில் லோவெல்லின் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் டாம் ஹேங்ஸ் நடித்திருந்தார்.