செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா பாதுகாப்புத் துறையை ‘போர் துறை’ என மறுபெயரிட ட்ரம்ப் உத்தரவு

பாதுகாப்புத் துறையை ‘போர் துறை’ என மறுபெயரிட ட்ரம்ப் உத்தரவு

1 minutes read

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை அன்று பாதுகாப்புத் துறையை (Department of Defense) ‘போர் துறை’ (Department of War) என மறுபெயரிடும் நிர்வாக ஆணையில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தத் துறையின் அதிகாரபூர்வமான மறுபெயர்ப்புக்கு அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் தேவைப்படும்.

இருப்பினும், இந்த ஆணை புதிய பெயரை அதிகாரபூர்வ கடிதங்கள், சட்டம் அல்லாத ஆவணங்களில் பயன்படுத்த அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பாதுகாப்புச் செயலாளர் (Secretary of Defense) ‘போர் செயலாளர்’ (Secretary of War) என்ற பட்டத்தைப் பயன்படுத்தலாம் என்றும் வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசியபோது, பெயரில் மாற்றம் செய்ய காங்கிரஸின் ஒப்புதல் தேவையில்லை என்று தான் நினைக்கவில்லை எனக் கூறினார்.

“நாங்கள் அதைச் செய்யப் போகிறோம். அதற்குத் தேவைப்பட்டால் காங்கிரஸ் ஒப்புதல் அளிக்கும் என்று நான் நம்புகிறேன். எங்களுக்கு அதுகூடத் தேவைப்படும் என்று நான் நினைக்கவில்லை,” என்று ட்ரம்ப் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.