ஜப்பான் வரலாற்றிலே முதல்முறையாக பெண் ஒருவர் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சியின் தலைவரான 64 வயதுடைய சானே தகாய்ச்சியே (Sanae Takaichi) ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை தனதாக்கியுள்ளார்.
ஜப்பானின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு, இன்று (21) நடைபெற்றது.
நாடாளுமன்றத்தில் உள்ள 465 உறுப்பினர்களில் 237 பேரின் வாக்குகளை தகாய்ச்சி பெற்று, பெரும்பான்மையை வென்றுள்ளார்.
இன்று மாலை ஜப்பானின் 104ஆவது பிரதமராக தகாய்ச்சி பொறுப்பேற்பார்.
ஜப்பானிய வரலாற்றில் இதுவொரு பெரும் புரட்சியாகக் கருதப்படுகிறது. தகாய்ச்சி ஜப்பானின் இரும்புப் பெண்மணி என்று போற்றப்படுபவர்.
மறைந்த இங்கிலந்து பிரதமர் மார்கரேட் தாட்சரை (Margaret Thatcher) தமது ஆதர்ஷமாக அவர் கருதுகிறார். பழமைவாதியான தகாய்ச்சி, பெண் உரிமைக்குக் குரல் கொடுப்பாரா என்பது சந்தேகமே என்று ஜப்பானிய இளம் பெண்கள் கூறுகின்றனர்.