செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா இலங்கை இளைஞன் ஜப்பானில் குத்திக் கொலை: உடன் தங்கிய 18 வயது இளைஞன் கைது

இலங்கை இளைஞன் ஜப்பானில் குத்திக் கொலை: உடன் தங்கிய 18 வயது இளைஞன் கைது

0 minutes read

ஜப்பானின் சிபா (Chiba) மாநிலத்தில் 21 வயது இலங்கை இளைஞன் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானில் கல்வி பயின்று வந்த குறித்த இளைஞனே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவருடன் ஒரே இடத்தில் தங்கியிருந்த 18 வயதுடைய மற்றுமொரு இலங்கை இளைஞரே இந்தக் கொலையைச் செய்ததாக ஜப்பான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து, கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து 18 வயதுடைய சந்தேகநபரை ஜப்பான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் விசாரணையின்போது, தானும் தனது தாயாரும் அவமதிக்கப்பட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் தாக்குதல் நடத்தியதாக சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளதாக ஜப்பான் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.