செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் சவூதி அரேபியாவுக்கான பயணங்களை தவிர்க்குமாறு இங்கிலாந்து பிரஜைகளுக்கு அவசர எச்சரிக்கை

சவூதி அரேபியாவுக்கான பயணங்களை தவிர்க்குமாறு இங்கிலாந்து பிரஜைகளுக்கு அவசர எச்சரிக்கை

1 minutes read

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில்கொண்டு, சவூதி அரேபியாவுக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு, தனது நாட்டுப் பிரஜைகளுக்கு இங்கிலாந்து அவசர அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

இங்கிலாந்து வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய பயண வழிகாட்டல் அறிவிப்பிலேயே, இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய ஜித்தா மற்றும் தம்மாம் நகரங்களுக்கான பயணங்களையும், மதீனா சர்வதேச விமான நிலையத்தை தவிர்ந்த சவூதி அரேபியாவில் உள்ள ஏனைய அனைத்து விமான நிலையங்களுக்கான பயணங்களையும் உடனடியாக தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி ரியாத்தில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட கடுமையான தாக்குதலை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை குறித்த விமான நிலையத்தை பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை, சவூதி அரேபியாவை விட்டு வெளியேறத் திட்டமிடும் இங்கிலாந்து பிரஜைகள், அங்கிருந்து விமான சேவைகளை பெறுவதற்கு முன்பாக பஹ்ரைன், குவைத், கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் அல்லது ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு தரைவழியாக பயணிப்பது குறித்து பரிசீலிக்குமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 13ஆம் திகதி முதல் சவூதி அரேபியா மீது ஹூதி கிளர்ச்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்கள் தொடர்ச்சியாக தீவிரமடைந்து வரும் பின்னணியிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி – சவுதி தலைநகர் ரியாத் விமான நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு; 11 பேர் காயம்

சவூதியில் உள்ள விமான நிலையங்கள், இராணுவ முகாம்கள், துறைமுகங்கள் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்பு வசதிகள் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சு எச்சரித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.