செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா அமைதி கொள் அன்பே! நீ இல்லாத வாழ்க்கை எப்படி இருக்குமோ? | போனி கபூர் உருக்கம்

அமைதி கொள் அன்பே! நீ இல்லாத வாழ்க்கை எப்படி இருக்குமோ? | போனி கபூர் உருக்கம்

1 minutes read

நடிகை ஸ்ரீதேவி கடந்த சில நாட்களுக்கு முன் துபாயில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தபோது அங்குள்ள குளியலறை தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்டதும் இந்திய திரையுகலமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.  அவருடைய உடலுக்கு நேற்று அரசு மரியாதையோடு இறுதி சடங்கு நடைபெற்று அடக்கம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவருடைய கணவர் போனி கபூர் உருக்கமான கடிதத்தை ஸ்ரீதேவியின் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார், அது பின்வருமாறு,

“ஒரு உற்ற தோழியை, மனைவியை, இரு பெண் குழந்தைகளின் தாயை இழந்து நிற்கும் சோகத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. குடும்பத்தார், நண்பர்கள், எங்கள் நலம் விரும்பிகள், ஸ்ரீதேவியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் என எல்லாருக்கும் என் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்த தருணத்தில் எனக்கும் என் மகள்களுக்கும் உறுதுணையாக இருக்கும் அர்ஜுன் மற்றும் அஷூலாவின் (போனி கபூர் – மோனா தம்பதியரின் பிள்ளைகள்) ஆதரவைப் பெற்றிருப்பதில் நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.

எங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் இந்த ஈடுசெய்யமுடியாத இழப்பை எதிர்கொள்ள முயற்சிக்கிறோம். ஓர் நிலவு போல திரை உலகிற்கு இருந்த ஸ்ரீ, எனக்கு காதலி, துணைவி, தோழி, என் பிள்ளைகளுக்கு தாய் என எல்லாமுமாய் இருந்தார். இரு மகள்களின் ஆதி முதல் அந்தம் வரை எல்லாமே என்னவள் ஸ்ரீதேவி தான். எங்கள் குடும்பம் என்ற சக்கரம் ஓட அச்சாணியாக இருந்தார்.

போனி கபூர் கடிதம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.