செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டதை போல புதிய வேளாண் சட்டங்களும் விரைவில் அகற்றப்படும்!

விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டதை போல புதிய வேளாண் சட்டங்களும் விரைவில் அகற்றப்படும்!

1 minutes read

டெல்லி: விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டதை போல புதிய வேளாண் சட்டங்களும் விரைவில் அகற்றப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஒன்றிய பாஜக அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த ஆண்டு, நவம்பர் 26ம் தேதி தலைநகர் டெல்லியில் இந்திய விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினார்கள். குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மிகத் தீவிரமான தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். காசிப்பூர் பகுதியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் சுமார் 10 மாதங்களை கடந்துள்ளது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தலைநகருக்குள் நுழையாமல் இருக்க முள்கம்பி, கான்கிரீட் சுவர்கள் கொண்டு டெல்லி எல்லையில் தடுப்புகளை போலீசார் அமைத்திருந்தனர். அந்த தடுப்புகள் அனைத்தும் இன்று அகற்றப்பட்டன. இதையடுத்து டெல்லி நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் செல்ல உள்ளதாகவும், விவசாய பொருட்களை அங்கு விற்பனை செய்ய உள்ளதாகவும் விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டதை போல புதிய வேளாண் சட்டங்களும் விரைவில் அகற்றப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிரான தடுப்புகளே தற்போது அகற்றப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதிய வேளாண் சட்டங்களும் நீக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.