March 26, 2023 11:26 pm

வடக்கில் உயர் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் பலரிற்கு இன்றிலிருந்து அமுலாகும் வரையில், வடக்கு மாகாண ஆளுநரால் திடீர் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, தற்போதைய ஆளுநர் செயலக செயலாளரான எஸ். சத்தியசீலன் கொழும்பு அமைச்சிற்கு விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரது இடத்திற்கு தற்போதைய உள்ளுராட்சி அமைச்சின் செயலாளரான சரஸ்வதி மேகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் வெற்றிடத்திற்கு தற்போதைய மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை மகளிர் விவகார அமைச்சின் செயலாளராக தற்போதைய பேரவைச் செயலாளரான ரூபினி வரதலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்