Sunday, October 17, 2021

இதையும் படிங்க

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-க்கு டெங்கு!

டெல்லி: உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-க்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, அவரது உடல்நலம்...

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை ஆண்டு இறுதிக்குள் நிறைவுசெய்யுமாறு அறிவுறுத்தல்!

அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்கு அனுப்புவதற்கு பதிலாக ஆண்டு இறுதிக்குள் அபிவிருத்தி திட்டங்களை நிறைவுசெய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின்...

இறுதிப் போட்டியில் இந்தியா- நேபாளம் | இன்யைதினம் பலப்பரீட்சை

5 நாடுகள் பங்கேற்றிருந்த 13 ஆவது தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனங்களின் சம்பியன்ஷிப் தொடரின் தீர்மானமிக்க இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நேபாள கால்பந்தாட்ட அணிகள் இன்றைய தினம் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உடன்தீர்வை வழங்குக| இராதாகிருஷ்ணன்

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உடன் தீர்வை வழங்குமாறு வலியுறுத்துகின்றோம் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சிறுவர்களிடையே பரவும் ஒருவகை நோய் | அதிதீவிர சிகிச்சை பிரிவில் 6 சிறுவர்கள் | இருவர் பலி

கொவிட் தொற்றின் பின்னர் சிறுவர்களுக்கு ஏற்படக் கூடிய பல உறுப்பு அழற்சி நோய் நிலைமை (மிஸ்-சி) ஏற்படும் வீதம் கடந்த ஒரு வார...

மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தெரிவு !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2022 முதல் 2024 ஆம் ஆண்டுகளுக்கான உறுப்பினர் பதவிக்கு இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் பதவிக்...

ஆசிரியர்

தமிழர்களுக்கான முழுமையான அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும் – இரா.சம்பந்தன்

இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன்பின்னரான காலகட்டங்களில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வரலாற்று ரீதியிலும் வாழ்விட, கலாசார மற்றும் மொழியியல் ரீதியிலும் தமிழ்மக்கள் கொண்டிருக்கும் உரிமையைப் பல்வேறு அரசதலைவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் பிரகாரம் வரலாற்று ரீதியான வாழ்விடத்தைப் பாதுகாப்பதற்கும் சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கும் அனைவருக்கும் உரிமை இருக்கின்றது என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எனவே தமிழ்பேசும் மக்கள் தமது வாழ்விடங்களில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான அந்தஸ்த்தைப் பெற்றிருக்கவேண்டும். பிளவுபடாத நாட்டிற்குள் தமிழ்மக்களுக்கான முழுமையான அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும் வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் காலங்காலமாக அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நில அபகரிப்பை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டும் வகையில் தயாரிக்கப்பட்ட ‘தாய்நிலம் : நில அபகரிப்பு இலங்கைவாழ் தமிழ்மக்களின் உண்மையான பெருந்தொற்று’ என்ற ஆவணப்படத்தின் திரையிடல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 5.30 மணிக்கு இணையவழியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆரம்ப உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் கூறியதாவது,

இந்நிகழ்வில் ஓரிரு வார்த்தைகள் பேசுவதற்காக என்னை இணைத்துக்கொண்ட ஏற்பாட்டாளர்களுக்கு நன்றிகூறவிரும்புகின்றேன். நில அபகரிப்பு என்பது இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில்வாழும் தமிழ்மக்கள் எதிர்கொண்டுவரும் முக்கிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது.

தமிழ்பேசும் மக்களிடன் பூர்வீக வாழ்விடங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காலத்திற்குக்காலம் இடம்பெற்ற இனத்துவப்பரம்பல் தொடர்பான சில புள்ளிவிபரங்களை இங்கு சுட்டிக்காட்டவிரும்புகின்றேன். 1947 ஆம் ஆண்டு தொடக்கம் 1981 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் சிங்கள மக்களின் சனத்தொகையில் 27 சதவீத அதிகரிப்பு அவதானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இக்காலப்பகுதியில் (1947 – 1981) கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களின் சனத்தொகை 818 வீதத்தினால் அதிகரித்துள்ளது. அதன்படி கிழக்கு மாகாணத்தில் பெருமளவு சிங்களக்குடியேற்றங்கள் நிறுவப்பட்டுள்ளமையினை அவதானிக்கமுடிகின்றது.

இந்நிலைவரம் தொடர்பில் அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவுடன் செல்வநாயகம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் அதனைத்தொடர்ந்து 1957 ஆம் ஆண்டில் பண்டா – செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதுமாத்திரமன்றி கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சிங்களவர்கள் பெருமளவில் குடியமர்த்தப்படுவது குறித்துப் பல்வேறு கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டன. அதன்தொடர்ச்சியாக 1965 ஆம் ஆண்டில் டட்லி – செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அவ்விரு ஒப்பந்தங்களும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ்மக்கள் வாழ்விட மற்றும் மொழியியல் ரீதியில் கொண்டிருக்கும் உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மூன்றாவதாக 1987 ஜுலை மாதத்தில் இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அவ்வொப்பந்தத்தின் ஊடாக வட – கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் கொண்டிருக்கும் வாழ்விட மற்றும் மொழியுரிமை தொடர்பான கருத்தியல் அங்கீகரிக்கப்பட்டது.

எனவே இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன்பின்னரான காலகட்டங்களில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தமிழ்மக்களின் வரலாற்று மற்றும் கலாசார, பாரம்பரிய அடிப்படையிலான வாழ்விடம் என்பதை பண்டாரநாயக்க, டட்லி சேனாநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்தன உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். அதனைத்தொடர்ந்து அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்த்தின் ஊடாக முழுமையான அதிகாரப்பரவலாக்கம் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டது.

அதேபோன்று காலத்திற்குக்காலம் தமிழ்மக்களுக்கான பல்வேறு விதமான அரசியல் தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. தமிழ்பேசும் மக்கள் தமது வாழ்விடங்களில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான அந்தஸ்த்தைப் பெற்றிருக்கவேண்டும்.

ஏனெனில் வடக்கு, கிழக்கு உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் வாழும் தமிழ்மக்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கான தமது வலுவான பங்களிப்பை வழங்கியிருக்கின்றார்கள். இது புதியதொரு விடயமல்ல. ஸ்கொட்டிஷ் மக்கள் ஸ்கொட்லாந்தில் வாழ்கின்றனர். வேல்ஸ் மக்கள் வேல்ஸில் உள்ளனர். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்தந்த இனமக்கள் வாழ்கின்றனர்.

அதேபோன்று தமிழ்மக்களுக்கும் பிரிக்கப்படாத நாட்டிற்குள் முழுமையான அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும். சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் பிரகாரம் வரலாற்று ரீதியான வாழ்விடத்தைப் பாதுகாப்பதற்கும் சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கும் அனைவருக்கும் உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டார். 

இதையும் படிங்க

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து, பக்தர்கள் அக்டோபர் 21ம் தேதி வரை தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள். அதில், முன்பதிவு...

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு!

நாட்டில் தடை செய்யப்பட்ட நாடு கடந்த தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப்போவதில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. உள்நாட்டுப் பிரச்சனைகள் உள்ளக பொறிமுறையின் ஊடாக தீர்க்கப்பட...

நாட்டில் மேலும் 23 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 23 பேர் நேற்று (15) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின்...

எம்.ஏ.சுமந்திரன் அறிவித்த போராட்டங்கள் –மாவை தலைமையில்!

வடக்கு, கிழக்கில் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி நாளையும் நாளை மறுதினமும் நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ள போராட்டங்களுக்கு...

தேசிய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தியது பற்றி பரிசீலிப்பேன்!

டெல்லி: தேசிய காங்கிரஸ் தலைவராக மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் வலியுறுத்தியது பற்றி பரிசீலிப்பேன் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்ட ராகுல்...

இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது!

2015 இல் நாட்டை விட்டு ஓடியவர்களே இன்று மீண்டும் ஆட்சியில் உள்ளனர். இது நொண்டி அரசாங்கம். இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது.” என்று ஜனநாயக மக்கள் முன்னியின் பிரதித்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சீனா வேண்டாம் | இந்தியாதான் என் தெரிவு | அமைச்சர் டக்ளஸ்

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் எனது தெரிவு எப்போதும் இந்தியாவாகத்தான் இருக்கும்.  இருப்பினும் இலங்கைக்கு தற்போது ஏனைய தரப்புக்களின் உதவிகள் பெருமளவிற்குத் தேவைப்படுகின்றன. எனவே அத்தகைய...

முச்சக்கர வண்டிகளை திருடி விற்கும் கும்பல் சிக்கியது | 20 வண்டிகள் மீட்பு

கம்பஹா மாவட்டத்தின் ஜா எல, கந்தானை, ஏக்கல  உள்ளிட்ட பகுதிகளை அண்மித்து முச்சக்கர வண்டிகளை திருடி, அவற்றை விற்பனை செய்து வந்த கும்பலொன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது.

சிறையில் இருக்கும் மகனுக்கு மணி ஆர்டர் அனுப்பிய ஷாருக்கான்

ஆர்யன்கான் தந்தை ஷாருக்கான் மற்றும் தாய் கவுரி கானுடன் வீடியோ காலில் பேச அனுமதிக்கப்பட்டார். ஆர்யன் கானுக்கு விசாரணை கைதிகளுக்கான அடையாள எண்ணும்...

மேலும் பதிவுகள்

ஆசிரியர் சம்பளப் பிரச்சினையை தீர்க்கத் தவறினால் மாணவர்களின் எதிர்காலம் சீரழியும்!

ஆசிரியர் - அதிபர் சேவையில் சம்பளத்தை இருகட்டமாக அதிகரிக்க பிரதமர் எடுத்த தீர்மானத்தை கல்வி அமைச்சர் தற்துணிவுடன் செயற்படுத்த வேண்டும். தொழிற்சங்கத்தினரது அழுத்தங்களுக்கு...

திருகோணமலை எண்ணெய் குதங்களை மேலும் 50 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கு வழங்க சூழ்ச்சி

திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்கும் சட்டவிரோத உடன்படிக்கையை மேலும் 50 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது...

பப்புவா நியூ கினியாவை தோற்கடித்தது இலங்கை

உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் பப்புவா நியூ கினியா அணிக்கெதிரான பயிற்சிப் போட்டியில்  இலங்கை 39 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

2021 லங்கா பிரீமியர் லீக் போட்டி அட்டவணை வெளியீடு

2021 லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியானது எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

டி-20 உலகக் கிண்ணத்தில் ஆப்கான் அணியின் ஆலோசகராக ஆண்டி பிளவர் நியமனம்

2021 டி-20 உலகக் கிண்ணத்துக்கான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவர் ஆண்டி பிளவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு