நாட்டை வந்தடைந்தார் சுப்பிரமணியன் சுவாமி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பிற்கமைய பாரதீஜ ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி மற்றும் அவரின் நண்பர் ஜெகதீஷ் ஷெட்டி ஆகியோர் மூன்று  நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று செவ்வாய்கிழமை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

Image

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  தமது குடும்பத்தினரின் நவராத்திரி விழாவில் பங்கேற்குமாறு விடுத்த அழைப்பிற்கமையவே இன்று இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி. வீ. சானக்க தினுஷான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதமரின்  இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆகியோர் வரவேற்றுள்ளார்கள்.

Image
Image
Image

ஆசிரியர்