Wednesday, December 1, 2021

இதையும் படிங்க

இலங்கையில் மின் தடை குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

இலங்கையின் பல இடங்களில் நேற்று இரவு பதிவாகிய மின் தடைகள் தொடர்பாக இலங்கை மின்சார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கையின் பல இடங்களில் நேற்றிரவு சுமார்...

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனமே காரணம்!

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனமும் மின்சார சபையுமே முக்கிய காரணமென நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார...

பொத்துஹெர பகுதியில் விபத்து -குழந்தை உயிரிழப்பு!

கொழும்பு – குருணாகல் வீதி, பொத்துஹெர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளது. லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து...

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை!

சென்னை: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மத்திய நீர்வளக் குழுமத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டபடி முல்லை...

வீட்டு சமையல் எரிவாயு பிரச்சினைகளுக்கு தீர்வு காண புதிய குழு!

வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே,...

இந்தியாவிற்குள்ளும் நுழைந்தது ஒமிக்ரோன்!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திற்கு வருகை தந்த 4 வெளிநாட்டவர்களுக்கு ஒமிக்ரோன் தொற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் கண்டறியப்பட்ட மிகவும் பரவக்கூடிய மாறுபட்ட கொரோனாவான ஒமிக்ரோன் குறித்த கவலைகளுக்கு மத்தியில்...

ஆசிரியர்

இராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடரும் | இந்திய இராணுவத் தளபதி

இலங்கைக்கும்  இந்தியாவுக்கும் இடையிலான பரஸ்பர இராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகள்  எதிர்காலத்திலும் தொடரும் என இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்தார்.

ஐந்து நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே இன்று பதில் பதுகாப்பு படைகளின் அலுவலக பிரதானியும் இராணுவத் தளபதியுமான  ஜெனரல் சவேந்திர சில்வாவை சந்தித்த பின்னர், அவருடன் இணைந்து ஊடகவியலாளர்களை சந்தித்தார். இதன்போதே அவர் மேற்படி விடயத்தை குறிப்பிட்டார்.

பத்தரமுல்லை – அக்குரேகொடவில் உள்ள இராணுவ தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இலங்கை இராணுவத்திற்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது தொடர்பாக இரு நாடுகளினதும் இராணுவத் தளபதிகளும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக பின்னர் அவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்த விடயங்களிலிருந்து தெரியவந்தது.

இன்று காலை இராணுவ தளபதி ஜெனரால் சவேந்ர சில்வாவை சந்தித்த பின்னர் இருவரும் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடாத்துவதாக இருந்தது. எனினும் இறுதி நேரத்தில் அது மாற்றப்பட்டு, சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு சிறு கருத்து தெரிவிப்பு மற்றும் இடம்பெற்றது. இதன்போது கேள்விகளை தொடுப்பதற்கான சந்தர்ப்பம் இருக்கவில்லை.

பெருமளவிளான ஊடகவியலாளர்கள், இராணுவ தலைமையகத்தில் கூடியிருந்த நிலையில், இரு தரப்பு  கலந்துரையாடலைத் தொடர்ந்து, இராணுவ தளபதி ஜெனரால் சவேந்ர சில்வாவுடன் இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே ஊடகவியலாளர்கள் இருந்த இடம் நோக்கி வந்து கருத்து வெளியிட்டார்.

இதன்போது இராணுவத் தளபதிஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானேவின் தூதுக் குழுவில்  உள்ளடங்கியிருந்த  இந்திய இராணுவத்தின் பயிற்சிகள் தொடர்பிலான கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரால்  ரஜீவ் தாப்பர், இந்திய இராணுவத் தளபதியின் செயலரான  மேஜர் ஜெனரால் விக்ராந் நாயக்,  கேர்ணல் மந்தீப் சிங் தில்லொன் உள்ளிட்டோரும் அங்கு பிரசன்னமாகினர்.

இதன்போது,  ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே முதிர்ச்சியடைந்த இரண்டு ஜனநாயக நாடுகளில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையே நிலவும் சிறந்த உறவுக்கு நிகரான உறவு இரு நாட்டு இராணுவங்களுக்கு இடையிலும் காணப்படுவதாக குறிப்பிட்டார்.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா மகத்தான வரவேற்பை தனக்கு வழங்கியதாக இதன்போது குறிப்பிட்ட அவர்,  தற்போதைய தனது பதவி நிலையில் தான் இலங்கைக்கு வரும் முதலாவது சந்தர்ப்பம் இது என நினைவு கூர்ந்தார்.

எவ்வாறாயினும் இலங்கை இராணுவத்துடன் தனக்கு மிக நெருங்கிய தொடர்பிருப்பதாக இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை இந்திய இராணுவங்களிடையே மிக நெருக்கமான பரஸ்பர  இரணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் காணப்படும் நிலையில், எதிர்க்காலத்திலும் அது தொடரும் என ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே குறிப்பிட்டார்.

இதன்போது அதன் ஒரு அங்கமாக தற்போதும் அம்பாறை மற்றும் மாதுரு ஓயாவில் இடம்பெறும் ‘ மித்ர சக்தி’ கூட்டு பயிற்சிகளை நினைவு கூர்ந்த அவர்,  அப்பயிற்கிகள் தொடர்பிலான இறுதிக் கட்ட நிகழ்வுகளிலும் தான் பங்கேற்க எதிர்ப்பார்ப்பதாக கூறினார்.

அத்துடன்  இலங்கை இராணுவம் உள்ளிட்ட முப்படையினரும், ஜெனரல் சவேந்ர சில்வாவின் தலைமையில்  கொவிட் 19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மிக வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாக  அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில் இலங்கையில் தங்கியிருக்கும் கால்ப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமரையும் மரியாதை நிமித்தம் சந்திக்கவுள்ளதாகவும் அதே நேரம் இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனையடுத்து இராணுவ தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே  உள்ளிட்ட தூதுக் குழுவை, சம்பிரதாயபூர்வமாக வரவேற்று, இரு நாடுகளுக்கும்  இடையே நிலவும் சுமுக இராணுவ தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வது  தொடர்பில் கலந்துரையாடியதாக ஜெனரல் சவேந்ர சில்வா கூறினார்.

வரலாறு நெடுகிலும் இலங்கை இராணுவத்துக்கு இந்தியா  பயிற்சி உள்ளிட்ட பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளதாகவும், இலங்கை இராணுவத்தில் பல அதிகாரிகள் இந்திய இராணுவ கல்லூரிகளில் பயிற்றப்பட்டுள்ளதாகவும் ஜெனரல் சவேந்ர சில்வா ஞாமகமூட்டினார்.

இவ்வாறான நிலையில்  இலங்கை இராணுவத்தின் படையணிகளில் ஒன்றான கஜபா படையணியின் வருடப் பூர்த்தியை முன்னிட்டு இடம்பெறும் மரியாதி அணிவகுப்பிலும், மித்ர சக்தி கூட்டுப் பயிற்சிகள் தொடர்பிலான நிகழ்விலும் இந்திய இராணுவ படைகளின் பிரதானியுடன் இணைந்து பங்கேற்கவுள்ளதாக ஜெனரல் சவேந்ர சில்வா குறிப்பிட்டார்.

இதையும் படிங்க

இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு – ஆலோசனைக் கூட்டம் இன்று!

குறித்த கூட்டம் இன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற சபை முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது. நேற்று, நாடாளுமன்ற சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன...

இலங்கையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று முதல் நடைமுறைக்கு!

எதிர்வரும் 15 நாட்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றைக்...

மாத்தறையில் தீ விபத்து- சிறுமி ஒருவர் உயிரிழப்பு!

மாத்தறை- வெலிகம பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தீ விபத்தின்போது வீட்டிற்குள் இருந்த சிறுமியின் பாட்டி...

வவுனியாவிலிருந்து புதிய பேருந்து சேவை இன்று ஆரம்பம்!

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியாசாலை பேரூந்து, இன்று (புதன்கிழமை) முதல் புதிய சேவை ஒன்றை ஆரம்பிக்கின்றது. வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து காலை 10.30 மணிக்கு...

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னை:சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை...

இந்தியாவில் சட்டவிரோத பேனர் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

சென்னை: சட்டவிரோத பேனர் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதிகளை பின்பற்றாமல் பேனர் வைக்க அனுமதிக்க கூடாது என தமிழ்நாடு...

தொடர்புச் செய்திகள்

இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு – ஆலோசனைக் கூட்டம் இன்று!

குறித்த கூட்டம் இன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற சபை முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது. நேற்று, நாடாளுமன்ற சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன...

இலங்கையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று முதல் நடைமுறைக்கு!

எதிர்வரும் 15 நாட்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றைக்...

மாத்தறையில் தீ விபத்து- சிறுமி ஒருவர் உயிரிழப்பு!

மாத்தறை- வெலிகம பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தீ விபத்தின்போது வீட்டிற்குள் இருந்த சிறுமியின் பாட்டி...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

வதுவை | சர்வதேச விருதுகள் பெற்று தமிழ்நாட்டில் கவனம் பெறும் கிளிநொச்சி யுவதியின் குறுந்திரைப்படம்

இந்த குறுந்திரைப்படத்தை கிளிநொச்சி தருமபுரத்தில் வசிக்கும் "லிப்ஷிஜா மகேந்திரம்" அவர்கள் எழுதி இயக்கியுள்ளார்.  இப்படத்தின் கதைக்கருவானது ‘ஒரு விதவைப் பெண் மறுதிருமணம் செய்ய முற்படும்போது குடும்பத்தாலும்...

பலோன் டி’ஓர் விருதினை ஏழாவது முறையாக வென்றார் மெஸ்ஸி

இந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி'ஓர் (Ballon d’Or) விருதினை பாரிஸ் செயின்ட்-‍ஜேர்மன் மற்றும் ஆர்ஜென்டினாவின் முன்னணி  வீரர் லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார்.

இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில்

இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் கான்பூரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி திங்களன்று வெற்றிதோல்வியின்றி முடிவுக்கு வந்தது. இப் போட்டியில்...

மேலும் பதிவுகள்

பிரிட்டன் அமைச்சருடன் நல்லிணக்கம் தொடர்பில் சுமந்திரன் பேச்சுவார்த்தையாம்

அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடனான சந்திப்புக்களின் அடுத்தகட்டமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் தெற்காசியப்பிராந்திய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தாரிக்...

“நான் சாகசவாதியல்ல, மக்களுக்காகப் போராடும் விடுதலைப் போராளி!”- பிரபாகரன் பிறந்த தினப் பகிர்வு

எந்தவித அற்ப அதிகாரங்களுக்காகவும் விலைபோகாத, தங்களின் உரிமைகளை அடகுவைக்காத விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் பிரபாகரனையுமே தங்களின் அடையாளமாக ஏற்கத் துணிந்தார்கள் ஈழத்தமிழ் மக்கள். அப்படித்தான் பிரபாகரன் ஈழத் தமிழர்களின் தலைவரானார்.

வவுனியாவில் குளம் உடைப்பெடுப்பு

வவுனியா ஓமந்தை கமநல சேவைகள் நிலையத்திற்கு உட்பட்ட செட்டியூர்குளம் நேற்று (29) மாலை உடைப்பெடுத்துள்ளது.  மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்தமையால் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத குளம்...

சுவடுகள் 11 | கனவிலேம் நித்திரை | டாக்டர் ரி. கோபிசங்கர்

இந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...

கெளரவமான சம்பளம் ஆசிரியர்களுக்கு கட்டாயமாக கொடுக்க வேண்டும்!

ஆசிரிய துறைக்கு ஏதுவான கெளரவமான சம்பளத்தையும் அவர்களுக்கான கெளரத்தையும் நாட்டின் சகல ஆசிரியர்களுக்கும் கட்டாயமாக கொடுக்கப்பட வேண்டும். நாட்டின்...

இன்று நவம்பர் 26 | ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. நினைவுதினம் | முருகபூபதி

நனவிடை தோய்தல் குறிப்புகள் !                                                         எழுதியவர் - முருகபூபதி

பிந்திய செய்திகள்

இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு – ஆலோசனைக் கூட்டம் இன்று!

குறித்த கூட்டம் இன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற சபை முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது. நேற்று, நாடாளுமன்ற சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன...

இலங்கையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று முதல் நடைமுறைக்கு!

எதிர்வரும் 15 நாட்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றைக்...

மாத்தறையில் தீ விபத்து- சிறுமி ஒருவர் உயிரிழப்பு!

மாத்தறை- வெலிகம பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தீ விபத்தின்போது வீட்டிற்குள் இருந்த சிறுமியின் பாட்டி...

வவுனியாவிலிருந்து புதிய பேருந்து சேவை இன்று ஆரம்பம்!

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியாசாலை பேரூந்து, இன்று (புதன்கிழமை) முதல் புதிய சேவை ஒன்றை ஆரம்பிக்கின்றது. வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து காலை 10.30 மணிக்கு...

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னை:சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை...

பிறந்தநாளில் மரக்கன்று நட்ட ராஷி கண்ணா…!

2013-ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கபே’ எனும் இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமான இவர்,...

துயர் பகிர்வு