Wednesday, October 27, 2021

இதையும் படிங்க

இந்தியா நீர்மூழ்கிக் கப்பல் குறித்த இரகசியங்களை பகிர்ந்த ஐவர் கைது!

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் குறித்து இரகசியங்களை வெளியிட்டமை தொடர்பாக மும்பையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் லெப்டினன்ட்...

ஜனாதிபதி செயலணிக்கு குற்றவாளியை நியமித்தமை நகைப்பிற்குரியது!

ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணியில் குற்றவாளியை நியமித்தமை நகைப்பிற்குரிய விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள...

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

இந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி...

இரு பெண் பிள்ளைகளை கொலை செய்த இலங்கை தாய் | இத்தாலியில் பயங்கரம்

இத்தாலியில் வெரோனா நகரத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தன்னுடன் இருந்த  இரண்டு பெண் பிள்ளைகளை இலங்கைத் தாய் ஒருவர் கொலை செய்துள்ளதாக வெளிநாட்டு...

பத்துக் கட்டளைகள் | துவாரகன்

உனக்கு பத்துக் கட்டளைகள் கற்றுத்தர ஆசைப்படுகிறேன். முதலில் பல்லிளிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.பின்னர்எண்ணெயில்லாமல்பந்தம் பிடிக்கவேண்டும்இன்னமும்அவர்கள் நடக்கும்போதுவால் நிலத்தில் படிந்துஅழுக்காகாமல் பார்த்துக்...

அமெரிக்க செனட்டரால் பாலியல் வன்கொடுமை – கிளிண்டன் உதவியாளர் பரபரப்பு தகவல்!

அமெரிக்க செனட்டரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விடயம் குறித்து ஹிலாரி கிளிண்டனின் முன்னாள் நெருங்கிய உதவியாளர் ஹூமா அபெடின் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அடுத்த வாரம்...

ஆசிரியர்

தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் | இலங்கை ஆசிரியர் சங்கம்

இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.

சம்பள பிரச்சினைக்கு பிரதமர் முன்வைத்த யோசனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. சம்பள பிரச்சினைக்கு தீர்வு ஒரு கட்டமாக வழங்கப்பட வேண்டும். தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

ஆசிரியர் மற்றும் அதிபர்கள் எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைக்கு சமூகமளிப்பது குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை. 21ஆம் திகதிக்கு முன்னர் தீர்வை பெற்றுத் தருமாறு தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம். எனவும் குறிப்பிட்டார்.

ஆசிரியர்கள் எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைக்க சமூகமளிக்காவிட்டால் ஆசிரியர்களுக்கு எதிராக வீதிக்கிறங்கி போராடுவதாக பிள்ளைகளின் கல்வியை பாதுகாக்கும் பெற்றோர் அமைப்பினர் தயாராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினருக்கும் நேற்று முன்தினம் இடம் பெற்ற பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் 31 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கிடையில் நேற்று பேச்சுவார்தை இடம்பெற்றது. இப்பேச்சுவார்த்தை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுபோதினி குழுவின் அறிக்கையை ஒரு பகுதியையாவது செயற்படுத்துமாறு வலியுறுத்தினோம். இருப்பினும் எமது கோரிக்கைகளுக்கு கவனம் செலுத்தப்படவில்லை. அமைச்சரவை உபகுழு கடந்த ஆகஸ்ட் மாதம் சமர்ப்பித்த அறிக்கைக்கு அமையவே அரசாங்கம் செயற்படுகிறது.

மூன்று கட்டங்களின் கீழ், சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு  வழங்குவதாக அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்தது. இருப்பினும் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இரண்டு கட்டங்களாக பிரச்சினைக்கு தீர்வு வழங்க  அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது. இதற்கு தொழிற்சங்கத்தினர் அவ்வேளையில் இணக்கம், தெரிவிக்கவுமில்லை, மறுப்பு தெரிவிக்கவில்லை. ஏனெனில் அரசாங்க தரப்பின் யோசனை முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.

சம்பள அதிகரிப்பை 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு கட்டமாகவும், 2023ஆம் ஆண்டு மிகுதி இருக்கட்டதாகவும் செயற்படுத்துவதாக பிரதமர் குறிப்பிட்டார். இதனால் எவ்வித பயனும் ஆசிரியர்களுக்கு கிடைக்கப் பெறாது. இவர்கள் குறிப்பிடுவதை கட்டம் கட்டமாக  சம்பளத்தை அதிகரிக்கும் போது முதல்கட்டத்தில் 15 ஆம் தர ஆசிரியர்களக்கு 3,750 ரூபாவில் 1,250 ரூபாவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 6,580 ரூபாவில் 2,193 ரூபா மாத்திரம் அதிகரிக்கப்படும். இதனை ஏற்க முடியாது. ஆகவே ஒரு கட்டமாகவே சம்பளத்தை அதிகரிக்க வேண்டும். என்ற கோரிக்கையில் தொடர்ந்து உறுதியாக உள்ளோம்.

சுபோதினி குழு அறிக்கையினை செயற்படுத்த முடியாது. என அரசாங்கம் குறிப்பிடுகிறது. இரு தரப்பிற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிற்சங்கத்தினர் தயாரித்த யோசனையை கல்வி அமைச்சரிடம் கடந்த 4 ஆம் திகதி கையளித்தோம்.அவர் அதனை அமைச்சரவைக்கு சமர்ப்பித்தாரா, இல்லையா என்பது தொடர்பில் எமக்கு தெரியாது. ஆகவே முரன்பாடற்ற தீர்வை கோருகிறோம். தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும். முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க எவ்வித முயற்சிகளையும் முன்னெடுக்காமல் அரசாங்கம் பாடசாலைகளை திறக்க முயற்சிப்பது தான்தோன்றினமான செயற்பாடாகும்.என்றார்.

ஆசிரியர் – அதிபர் சேவையில் சுமார் 24 வருட காலமாக நிலவும் சம்பள பிரச்சினையை முன்னிலைப்படுத்தி ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கத்தினர் கடந்த மூன்று மாத காலமாக நிகழ்நிலை கற்பித்தல் கடமையில் இருந்து விலகி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள்.

போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையில் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கத்தினருக்கும், கல்வி அமைச்சின்  அதிகாரிகளுக்கும், பிரதமருக்கும், ஏனைய தரப்பினருக்கும் இடையில் பல கட்டமாக இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இதற்மைய பிரதமர் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி தரம்  1 தொடக்கம் 5 ஆம் தர மாணவர்களுக்காக பாடசாலைகளை முதற்கட்டமாக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தீர்வு கிடைக்காவிட்டால் சேவையில் ஈடுப்படமாட்டோம். என தொழிற்சங்கத்தினர் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளனர்.

21 ஆம் திகதி ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்காவிட்டால் ஆசிரியர்களுக்கு எதிராக வீதிக்கிறங்கி தொடர் போராட்டத்தில் ஈடுப்படுவதாக பிள்ளைகளின் கல்வியை பாதுகாக்கும் பெற்றோர் அமைப்பினர் குறிப்பிட்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான வழக்கை கைவிடுமாறு உத்தரவு!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கைக் கைவிடுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதியும், பிரதமரும் எள்ளென்றால் நான் எண்ணெய்யாக இருப்பேன்!

ஜனாதிபதியும், பிரதமரும் எள்ளென்றால் நான் எண்ணெயாக இருந்து அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் என கடற்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சீன சேதன உரக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம்!

சீன சேதன உரக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோமென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஜனநாயகத்தை நசுக்க நடக்கும் முயற்சிகளுக்கு காங்கிரஸ் கண்டனம்!

டெல்லி: இந்திய ஜனநாயகத்தை நசுக்க நடக்கும் முயற்சிகளுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய உச்ச நீதிமன்றம், பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்துப் புலனாய்வு செய்ய சுயேச்சை...

இலங்கையில் செயற்கை உரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!

புத்த பெருமானின் போதனைக்கமைய ஒழுங்கமைந்துள்ள முன்மாதிரி உரிமைகளைக் கொண்ட இலங்கை, மானுடத் தேவைகளுடன் சுற்றுச்சூழலைச் சமநிலைப்படுத்துவதன் அவசியத்தை நன்றாகப் புரிந்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பெகாசஸ் உளவு விவகாரம் : இடைக்கால தீர்ப்பு இன்று!

பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் இன்று (புதன்கிழமை) இடைக்கால தீர்ப்பளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் வாயிலாக எதிர்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட 300...

தொடர்புச் செய்திகள்

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான வழக்கை கைவிடுமாறு உத்தரவு!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கைக் கைவிடுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதியும், பிரதமரும் எள்ளென்றால் நான் எண்ணெய்யாக இருப்பேன்!

ஜனாதிபதியும், பிரதமரும் எள்ளென்றால் நான் எண்ணெயாக இருந்து அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் என கடற்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சீன சேதன உரக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம்!

சீன சேதன உரக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோமென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கமலின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த மேலும் ஒரு மலையாள நடிகர்

விக்ரம் படத்தில் ஏற்கனவே பகத் பாசில், நரேன், ஆண்டனி வர்கீஸ், காளிதாஸ் ஜெயராம் என நான்கு மலையாள நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

பத்துக் கட்டளைகள் | துவாரகன்

உனக்கு பத்துக் கட்டளைகள் கற்றுத்தர ஆசைப்படுகிறேன். முதலில் பல்லிளிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.பின்னர்எண்ணெயில்லாமல்பந்தம் பிடிக்கவேண்டும்இன்னமும்அவர்கள் நடக்கும்போதுவால் நிலத்தில் படிந்துஅழுக்காகாமல் பார்த்துக்...

இசுலாமியரென்பதாலேயே ஷாருக்கான் மகன் மீது குறி வைப்பதா? | சீமான்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் இசுலாமியர் என்பதாலேயே அரசதிகாரம் அவர் மீது குறிவைக்கிறது என கடும் கண்டனத்தை நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

மேலும் பதிவுகள்

தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த விஜய்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை நேரில் அழைத்து விஜய் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக 57 பேர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 57...

ஓ மணப்பெண்ணே | திரைவிமர்சனம்

நடிகர்ஹரிஷ் கல்யாண்நடிகைபிரியா பவானி சங்கர்இயக்குனர்கார்த்திக் சுந்தர்இசைவிஷால் சந்திரசேகர்ஓளிப்பதிவுகிருஷ்ணன் வசந்த் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் நாயகன் ஹரிஷ்...

ஆசிரியர் – அதிபர்கள் 25ம் திகதி முதல் முன்னெடுக்கவுள்ள போராட்டம்!

ஆசிரியர், அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான தொழிற்சங்க நடவடிக்கையின் அடுத்த கட்டம் குறித்து ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க முன்னணி கல்வி அமைச்சுக்கு அறியப்படுத்தியுள்ளது.

கடாபியின் நிலைமை கோட்டாவுக்கும் வரும் என்கிறாரா விமல்?

அரசியல் ரீதியில் தீர்மானமிக்க பயணத்தை நோக்கி பயணிக்கிறோம். டொலருக்காக  மனசாட்சிக்கு விரோதமாக அரசியல் செய்ய முடியாது. ஆகவே ஒன்றிணைந்த...

இந்தியாவை 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிகொண்டு பழிதீர்த்தது பாகிஸ்தான்

இருபதுக்கு - 20 உலகக்கிண்ண சுப்பர் 12 சுற்றின் பரபரப்பான போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின.

பிந்திய செய்திகள்

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான வழக்கை கைவிடுமாறு உத்தரவு!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கைக் கைவிடுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதியும், பிரதமரும் எள்ளென்றால் நான் எண்ணெய்யாக இருப்பேன்!

ஜனாதிபதியும், பிரதமரும் எள்ளென்றால் நான் எண்ணெயாக இருந்து அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் என கடற்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சீன சேதன உரக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம்!

சீன சேதன உரக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோமென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஜனநாயகத்தை நசுக்க நடக்கும் முயற்சிகளுக்கு காங்கிரஸ் கண்டனம்!

டெல்லி: இந்திய ஜனநாயகத்தை நசுக்க நடக்கும் முயற்சிகளுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய உச்ச நீதிமன்றம், பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்துப் புலனாய்வு செய்ய சுயேச்சை...

இலங்கையில் செயற்கை உரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!

புத்த பெருமானின் போதனைக்கமைய ஒழுங்கமைந்துள்ள முன்மாதிரி உரிமைகளைக் கொண்ட இலங்கை, மானுடத் தேவைகளுடன் சுற்றுச்சூழலைச் சமநிலைப்படுத்துவதன் அவசியத்தை நன்றாகப் புரிந்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மானநஷ்ட வழக்கு…. நடிகை சமந்தாவுக்கு நீதிபதி அதிரடி உத்தரவு!

நடிகை சமந்தா விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டதும் தன்னைப்பற்றி அவதூறு தகவல்களை பரப்பியதாக சில யூ-டியூப் சேனல்கள் மீது நஷ்டஈடு கேட்டு ஐதராபாத்தில் உள்ள கூகட்பள்ளி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சமந்தா...

துயர் பகிர்வு