Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் வாகன உதிரிப்பாக இறக்குமதிக்கு இதுவரை தடையில்லை!

இலங்கையில் வாகன உதிரிப்பாக இறக்குமதிக்கு இதுவரை தடையில்லை!

0 minutes read

வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கு இதுவரை தடை விதிக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறினார்.

அத்தோடு வாகன உதிரிபாகங்களின் விலையில் வரம்பற்ற அதிகரிப்பு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More