செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் சில இடங்களில் மழையுடனான வானிலை தொடரக்கூடும்!

இலங்கையில் சில இடங்களில் மழையுடனான வானிலை தொடரக்கூடும்!

0 minutes read

வடக்கு, வட மத்திய, வட மேல், தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று (புதன்கிழமை) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் 75 மில்லிமீட்டர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் சில பகுதிகளில் 50 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.