இலங்கையில் பொது மக்களின் பாதுகாப்பிற்கே அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும்!

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கான ஆரம்ப அறிக்கையை வெளியிட்ட பிரதமர், புதிய அரசியலமைப்புக்கான வரைவு தற்போது வகுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்கு முன்வைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் மக்கள் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்கள் உரிய நேரத்தில் எட்டப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகவும் அதற்கமைவாக குறுகிய கால மற்றும் நீண்ட காலத் திட்டங்களுடன் கூடிய வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சமர்ப்பித்தார் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆசிரியர்