இலங்கையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான புதிய வழிகாட்டல்கள் வெளியாகின!

ஜனாதிபதி சட்டத்தரணிகளின் நியமனத்தின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் P.B. ஜயசுந்தரவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி 2255/24 ஆம் இலக்கம் என குறிப்பிடப்பட்டு வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியூடாக, ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம் தொடர்பில் 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி 2147/37 என இலக்கம் குறிப்பிட்டு வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர்