செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சிவாஜிலிங்கத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

சிவாஜிலிங்கத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

1 minutes read
HTML tutorial

முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தொடர்பில் பொலிஸார் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் உண்மை நிலை தொடர்பில் புலன் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கையிடுமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற எல்லையில் நவம்பர் 21 தொடக்கம் 28ஆம் திகதி வரை நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பங்களை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் வல்வெட்டித்துறை, தீருவில் திடலில் இன்றைய தினம்,  மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெறுவதற்கு திட்டமிடல் உள்ளதனால் அதற்கு தடை உத்தரவு வழங்குமாறு வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்று, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் புதிய விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்தனர்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டார். இதன்போது பிரதிவாதி சார்பில் மூத்த சட்டத்தரணி ஒருவர் முன்னிலையானார்.

இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான், பொலிஸாரின் விண்ணப்பத்தில் கோரப்பட்ட தடை உத்தரவு கோரிக்கையை நிராகரித்து கட்டளையிட்டார்.

பொலிஸாரினால் பாரதூரமான குற்றச்செயல் இடம்பெறலாம் என தாக்கல் செய்யப்பட்ட சிவாஜிலிங்கம் தொடர்பான மூன்று ஆவணங்களையும் புலன் விசாரணை செய்து,  எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி மன்றுக்கு அறிக்கையிடுமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.