இலங்கைக்குள் நுழைய 6 நாடுகளின் பயணிகளுக்கு தடை!

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் திரிபு காரணமாக, சில நாடுகளிலிருந்து வருகைதரும் பயணிகளுக்குத் தடை விதிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி பொத்ஸ்வானா, தென்னாபிரிக்கா, நமீபியா, லெசோதோ, எஸ்வடினி மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு, இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு முதல் தடை விதிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 14 நாட்களுக்குள் குறித்த நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டவர்களுக்கு இந்தத் தடை விதிக்கப்பட உள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்