கிளிநொச்சி-இரணைமடு குளத்தின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டன!

வடக்கு மாகாணத்தில் பாரிய குளமான இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபால் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோரினால் திறந்து விடப்பட்டுள்ளன.

அதிக மழைவீழ்ச்சி காரணமாக இரணைமடு குளத்திற்கான நீரின் வரத்து அதிகரிக்க ஆரம்பித்தமையின் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 6 மணி அளவில், நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டன.

அந்தவகையில் மூன்றாம் இலக்க வான்கதவு 6 அங்குலமாகவும் நான்காம் இலக்க வான்கதவு 12 அங்குலமாகவும் ஐந்தாம் இலக்க வான்கதவு 12 அங்குலமாகவும் ஆறாம் இலக்க வான்கதவு 6 அங்குலமாகவும் திறக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 3 அடியாக இரணைமடு குளத்தின் நீர் வெளியேறுகிறது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதாவது, இரணைமடு குளத்தின் நீர்வரத்து அதிகரித்தமையினால் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டன.

இரணைமடு குளத்தில் இருந்து வெளியேறுகின்ற நீரினால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்