இலங்கையில் இரத்து செய்யப்பட்டிருந்த ரயில் சேவைகள் ஆரம்பம்!

அந்தவகையில் மலையக ரயில் சேவையில் ´பொடி மெனிகே´ ரயில் மாத்திரம் நேற்று முதல் பதுளைக்கும் கொழும்புக்கும் இடையில் சேவையில் ஈடுபடடும் என கூறப்பட்டிருந்தது.

இதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கான பொடி மெனிகே புகையிரதம், இன்று காலை 5.55 மணிக்கு புறப்பட்டது.

இதேவேளை பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிய மற்றுமொரு புகையிரதம், நேற்று காலை 8.30 மணிக்கும் புறப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் சில தினங்களில், பொடி மெனிகே ரயில் சேவை மாத்திரம், பதுளை மற்றும் கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை புத்தளம் ரயில் பாதையில், நேற்று முதல் புத்தளம் வரையிலான சேவைகளை மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மற்றும் பாலாவிக்கிடையில் ரயில் பாதையில் இடம்பெற்ற மண்சரிவின் காரணமாக புத்தளம் ரயில் பாதையில் ரயில் சேவை பங்கதெனிய வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 27 ஆம் திகதி, புனானி மற்றும் வெலிகந்த ரயில் பாதையில் திருத்தப்பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – மட்டக்களப்பு ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளது.

இதற்கிடையில் காலி தபால் ரயில் சேவை தவிர்ந்த ஏனைய அனைத்து தபால் ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆசிரியர்