இலங்கை எந்த நேரத்திலும் முழு இருளில் மூழ்கக்கூடும்?

மின்சார மீள் இணைப்பு பணிகளில் ஈடுபட போவதில்லை என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு இதனை தெரிவித்துள்ளார்.

சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளமையினால், 8 மணிநேரத்திற்கு மேலதிகமாக பணிப்புரிய போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்களுக்கான கடமை நேரம் 8 மணிநேரத்திற்குள் உள்ளடங்காத காரணத்தினால் இவ்வாறு மின்சார மீள் இணைப்பு பணிகளில் ஈடுபடப்போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆசிரியர்