இலங்கையில் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் ஆரம்பம்!

அதற்கமைய, அதன் செயற்பாடுகள் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கடந்த நவம்பர் 15ஆம் திகதி அறிவித்தார்.

சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அவர் உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்