பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையர் – பிரதான சந்தேகநபர் கைது!

அதற்கமைய, இம்தியாஸ் அலியா பில்லி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மேலும் இவர் ராவல் பிண்டி பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் – சியல்கொட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இலங்கையைச் சேர்ந்த பொறியியலாளர் பிரியந்த குமார என்பவர் ஒரு கும்பலால் அடித்து எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இலங்கை அரச தலைவர்கள் உட்பட பலர் கண்டனம் வெளியிட்டிருந்தனர்.

அத்தோடு, இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்