May 28, 2023 4:55 pm

நல்லூர் சிவன் ஆலயத்தில் பிரம்ம சிரச்சேத உற்சவம்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

புராண கதைகளில் பிரமனின் தலையை சிவபெருமான் கிள்ளும் கதையை சித்தரிக்கும் திருவிழா, நல்லூர் சிவன் ஆலயத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.

நல்லூர் சிவன் ஆலய மகோற்சவம் நடைபெற்று வருகிற நிலையில், குறித்த திருவிழா நடைபெற்றது.

படைக்கும் கடவுளான பிரமனுக்கு முன்னதாக ஐந்து தலைகள் இருந்ததாகவும் அதனால், பிரமன் ஆணவத்துடன் காணப்பட்டதால், சிவபெருமான் பிரமனின் ஆணவத்தை நீக்கும் முகமாக அவரின் ஒரு தலையை கிள்ளியதாகவும் பரமனை மதித்திடா பங்கையாசனன் ஒரு தலை கிள்ளியே.. ‘ என புராண கதைகளில் கூறப்பட்டுள்ளது.

குறித்த கதையினை சித்தரிக்கும் வகையிலையே இந்த திருவிழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்