வவுனியாவில் பஸ் – டிப்பர் மோதி விபத்து! – 15 பேர் காயம்

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் பஸ் – டிப்பர் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 5.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தங்காலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பஸ்ஸும் மாங்குளத்திலிருந்து கனகராயன்குளம் நோக்கிச் சென்ற டிப்பரும் மோதிக்கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது டிப்பர் சாரதி உட்பட பஸ்ஸில் பயணித்த பயணிகள் உள்ளிட்ட 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தக் கோர விபத்தில் காயமடைந்தவர்கள் மாங்குளம், வவுனியா மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர்