Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜனவரி 15 முதல் வடக்குக்கான ரயில் சேவை இடைநிறுத்தம்!

ஜனவரி 15 முதல் வடக்குக்கான ரயில் சேவை இடைநிறுத்தம்!

1 minutes read

பழுதடைந்த ரயில் பாதையை சீரமைக்கும் வரை ஜனவரி 15 ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு மஹவயிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் சேவை நிறுத்தப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று (28) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனவரி 15 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மஹவயில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் ரயிலை நிறுத்த வேண்டும். ரயில் பாதை திருத்தப்படாததால் மஹவயில் இருந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More