March 24, 2023 4:08 am

ஆழ்கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் இந்தியக் கடற்படையால் மீட்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆழ்கடலில் தத்தளித்த 4 இலங்கை மீனவர்களை இந்தியக் கடற்படையினர் மீட்டு சென்னைத் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அந்தாமான் கடலில் இரண்டு மாதங்களாகத் தத்தளித்த இலங்கை மீனவர்களையே இந்தியக் கடலோரக் காவல்படை மீட்டுள்ளது.

இலங்கையின் மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசங்களில் இருந்து மீன்பிடிப்பதற்காகப் படகு ஒன்றில் கடந்த ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் சென்ற 4 மீனவர்கள் காணாமல்போயிருந்தனர். இயந்திரக் கோளாறு காரணமாக 54 நாட்கள் கடலில் தத்தளித்த நால்வரையும் நேற்றிரவு இந்தியக் கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு உணவு வழங்கி மருத்துவம் அளித்த கடற்படையினர், அவர்களைச் சென்னைத் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்