மைத்திரியின் கோரிக்கைக்கு ரணில் பச்சைக்கொடி

“மாவட்ட அபிவிருத்தி சபைகளை ஸ்தாபிப்பதற்கு நான் தயார். இது சம்பந்தமாக பேச்சு நடத்தப்படும்.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை பற்றி கருத்துகளை முன்வைத்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது, மாவட்ட அபிவிருத்தி சபைகள் உருவாக்கப்பட்டால் அதற்கு முழு ஆதரவையும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வழங்கும் என்று மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

ஆசிரியர்