வெல்லம்பிட்டியில் ஆயுதங்களுடன் கைதான 6 பேரும் பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட   கிட்டம்பஹுவ பகுதியில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதங்களுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.  

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெல்லம்பிட்டி, மத்தள மற்றும் கொலன்னாவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

சந்தேக நபர்களில் ஒருவர் முன்னர் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவராவார். மேலதிக விசாரணைகளுக்காக வெல்லம்பிட்டி பொலிஸாரிடம்  சந்தேக நபர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

ஆசிரியர்