யாழ் பல்கலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை | 300 பேர் முறைப்பாடு!

  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவிகள் வீதியால் செல்கையில் சில ஆசாமிகள் பாலியல் தொல்லை கொடுக்கின்றதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொக்குவிலில் உள்ள பெண்கள் விடுதி மற்றும் வாடகை அறைகளில் தங்கி உள்ள மாணவிகள் பல்கலைக்கழகத்துக்கு செல்கையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.

யாழ் பல்கலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; 300 பேர் முறைப்பாடு! | Sexual Harassment Students

இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கடந்த மாதம் 300 மாணவிகளின் கையெழுத்துடன் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

எனினும் மாணவிகள் மீதான ஆசாமிகளின் பாலியல் தொல்லை தொடர்ந்தமையால், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் பின்புற வீதியூடாக விடுதிக்குச் செல்லுகின்ற மற்றும் அந்தப் பகுதியிலுள்ள வாடகை அறைகளுக்கு செல்லும் மாணவிகளையும் இலக்கு வைத்த சில போக்கிரிகள் மிக மோசமான ஆபாசமாக நடந்துகொள்வதாக மாணவிகள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்துடன் தொடர்பில்லாத இளைஞர்களே இவ்வாறான அநாகரிகச் செயற்பாட்டைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ் பல்கலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; 300 பேர் முறைப்பாடு! | Sexual Harassment Students

நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பல்கலைக்கழக மாணவிகள் இருவரை வழிமறித்து ஆபாச வார்த்தைகளால் பேசிய நிலையில் மோட்டார் சைக்கிளின் இலக்கத்துடன் மாணவிகள் கோப்பாய் பொலிஸில் உடனடியாக முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர்