May 31, 2023 6:04 pm

அமெரிக்காவுக்குப் பறக்க முடியாமல் அவதிப்படும் கோட்டாபய!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தனது அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்துச் செய்ததால் கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவுக்குச் செல்ல முடியாமல் இப்போது அவதிப்படுகின்றார்.

ஏதாவது ஒரு வழியில் அமெரிக்கா சென்று விட வேண்டும் என்ற முடிவில் இருக்கும் கோட்டாபய அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்.

ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாக அல்லது அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராகச் செல்வதற்கு விருப்பம் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், ஜனாதிபதியிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை.

இந்தநிலையில் சுற்றுலா விசாவிலாவது அமெரிக்கா செல்வதென்று முடிவெடுத்து அதற்குக் கோட்டாபய விண்ணப்பித்துள்ளார். அதுவும் இப்போது தாமதமாகின்றது.

இதனால் கவலையில் இருக்கும் கோட்டாபயவை அமெரிக்காவில் இருக்கும் அவரது பிள்ளைகள் ஆறுதல்படுத்தி வருகின்றனர்.

விசா கிடைக்கும் வரை அவர்கள் இலங்கை வந்து கோட்டாபயவுடன் சில நாட்கள் இருப்பதற்கு முடிவெடுத்துள்ளனர் என்று அறியமுடிகின்றது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்