செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கோட்டா, மஹிந்தவின் வீழ்ச்சிக்குக் காரணகர்த்தாக்கள் யார்? – விமல் விளக்கம்

கோட்டா, மஹிந்தவின் வீழ்ச்சிக்குக் காரணகர்த்தாக்கள் யார்? – விமல் விளக்கம்

1 minutes read

“கோட்டாபய ராஜபக்சவின் வீழ்ச்சிக்கு அவரது சகோதரனான பஸில் ராஜபக்சவே பிரதான காரணம். அதேபோல் மஹிந்த ராஜபக்சவின் வீழ்ச்சிக்கு அவரின் மூத்த மகனான நாமல் ராஜபக்சவே பிரதான காரணம்.”

– இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நாமல் ராஜபக்ச ஒரு புரைலர் கோழி. பிறந்த உடனே நாடாளுமன்றத்துக்கு வந்துவிட்டார்.

“மஹிந்த ராஜபக்ச உண்மையான தந்தை என்றால் அவர் நாமல் ராஜபக்சவை நல்ல பக்குவம் அடைந்த பின் அரசியலுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும்.

எத்தனையோ பணக்காரர்கள் தங்களது பிள்ளைகளை பஸ்களில் அனுப்பி அடிமட்டத்தில் இருந்து பழக்குகின்றார்கள்.

அப்போதுதான் தந்தையின் மறைவுக்குப் பின் அவரது நிறுவனத்தை அவரது பிள்ளைகள் வெற்றிகரமாகக் கொண்டு செல்வர். அவர்தான் சரியான தந்தை.

அப்படித்தான் அரசியலிலும். அடிமட்டத்தில் இருந்துதான் வர வேண்டும்.

தந்தை ஜனாதிபதி என்ற கெத்தில் நாமல் நாடாளுமன்றதுக்கு வந்தார். மாமா என்று அழைத்தவர்களையெல்லாம் மச்சான் என்று அழைக்கத் தொடங்கினார். இறுதியில் மஹிந்த மண்கவ்வினார்” – என்றார்.
………

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.