செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி இளைஞர் சாவு!

முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி இளைஞர் சாவு!

0 minutes read

முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

விசுவமடுப் பகுதியில் இரும்பு ஒட்டும் கடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மூங்கிலாறு வடக்கு, உடையார்கட்டுப் பகுதியில் வசித்து வரும் 17 வயதுடைய குறித்த இளைஞர், குடும்ப கஷ்டம் காரணமாக விசுவமடு, 10 ஆம் கட்டைப் பகுதியில் உள்ள இரும்பு ஒட்டும் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார்.

தொழில் கருவிக்கு நேற்று மின் இணைப்பை இணைக்கும் முயற்சியை மேற்கொண்டபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இளைஞரின் சடலம், சக இளைஞர்களால் மீட்கப்பட்டு தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

சடலம், உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.