இலங்கையில் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதன்படி கண்டி மாவட்டத்தில் பஹததும்பர, உடுதும்பர, உடுநுவர, கங்க இஹல கோரள, பஹத ஹேவா ஹெட, கங்கவட கோரள, ஹரிஸ்பத்து, தும்பனே, பூஜாபிட்டிய, யட்டிநுவர ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ, ரம்புக்கன, மாவனெல்ல, புளத்கொஹூபிட்டிய, கேகாலை, ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குருநாகல் மாவட்டத்தில் ரிதிகம, பொல்கஹவெல பிரதேச செயலக பிரிவுகளுக்கும், மாத்தளை மாவட்டத்தின் இரத்தோட்டை, மாத்தளை, யடவத்த, உக்குவெல, நாவுல பள்ளேகம பிரதேச செயலக பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பிரதேச செயலக பிரிவுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.