May 28, 2023 6:12 pm

யாழில் பட்டு வேட்டியுடன் சீனத் தூதரக அதிகாரி!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் அதிகாரி ஒருவர் தமிழர்களின் கலாசார உடையான பட்டு வேட்டி அணிந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தது அங்கிருப்பவர்களை கவர்ந்தது.

யாழ்ப்பாணம் – கோட்டைக்குச் சீனத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் ஹு வெய், சீனத் தூதரகத்தின் அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட மூவர் நேற்று மாலை விஜயம் செய்தனர்.

இதன்போது அக்குழுவில் அடங்கிய பிரதிநிதி ஒருவரே பட்டு வேட்டியுடன் வருகை தந்திருந்தார்.

கடந்த காலத்தில் யாழ். நல்லூர் ஆலயத்துக்கு இலங்கைக்கான சீனத் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் பட்டு வேட்டியுடன் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்