செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேர்தலை ஒத்திவைப்பதற்கான யோசனை நாளை நாடாளுமன்றில்!

தேர்தலை ஒத்திவைப்பதற்கான யோசனை நாளை நாடாளுமன்றில்!

0 minutes read

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான யோசனை ஒன்று நாடாளுமன்றத்தில் நாளை முன்வைக்கப்படவுள்ளது என்று முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமான தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்தே இந்தத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான யோசனை ஒன்று நாடாளுமன்றத்தில் நாளை முன்வைக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு அரசு இந்த யோசனையை முன்வைத்தால், அதற்கு எதிராக தாங்கள் வாக்களிக்கவிருப்பதாகவும் தயாசிறி ஜயசேகர எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

தற்போது தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ள நடவடிக்கைகளின் பிரகாரம், மார்ச் மாதம் 4 ஆம் திகதி தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அறியமுடிகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.