September 22, 2023 1:42 am

முன்னிலை சோஷலிசக் கட்சியும் முதன்முறையாகக் களமிறங்க முடிவு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குமார் குணரத்னம் தலைமையிலான முன்னிலை சோஷலிசக் கட்சியும் களமிறங்கவுள்ளது. 22 தேர்தல் மாவட்டங்களிலும் அக்கட்சி போட்டியிடவுள்ளது.

முன்னிலை சோஷலிசக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அக்கட்சி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் பலர் முன்னிலை சோஷலிசக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.

ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் பங்கேற்ற தரப்புகளில் முன்னிலை சோஷலிசக் கட்சி பிரதான இடத்தை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்