Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். நாக விகாரையில் ரணில்!

யாழ். நாக விகாரையில் ரணில்!

1 minutes read

தேசிய தைப்பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக இன்று யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றார்.

அதன் பின்னர் யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாராதிபதி வணக்கத்துக்குரிய மீகஹஜந்துரே சிரிவிமல நாயக்க தேரரைச் சந்தித்து நலம் விசாரித்த ஜனாதிபதி, அவரின் உடல் நலன் குறித்தும் கேட்டறிந்ததோடு சிறிது நேரம் அவருடன் உரையாடினார்.

அதனைத் தொடர்ந்து நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரால் செத்பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கப்பட்டது.

‘பௌத்த இந்து சமய மன்றம்’ சார்பில் ஜனாதிபதியை அதன் தலைவர் கலாநிதி எம்.மோகன் வரவேற்றார்.

இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More